Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் படங்களே இல்லாத காஜல், தமன்னா...!

28 செப், 2014 - 12:25 IST
எழுத்தின் அளவு:

இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களான அஜித் நடித்த 'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்களில் முறையே தமன்னாவும், காஜல் அகர்வாலும் நாயகிகளாக நடித்திருந்தனர். அந்தப் படங்கள் வெளிவந்து சுமார் ஒன்பது மாதங்களாகியும் அவர்களிருவருக்குமே தமிழில் வேறு எந்தப் புதுப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இத்தனைக்கும் அந்த இரண்டு படங்களையும் வெற்றிப் படங்களாகவே அஜித், விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள். வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெறவில்லை என்று திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் சொன்னாலும் அவர்களுடைய ரசிகர்களைப் பொறுத்தவரை அவை வெற்றிப் படங்கள்தான்.


அப்படியிருக்க தமன்னாவுக்கும், காஜல் அகர்வாலுக்கும் அடுத்து தமிழில் வேறு எந்தப் படங்களுமே ஒப்பந்தம் ஆகாததுதான் ஆச்சரியம். ஒரு மொழியில் முன்னணி ஹீரோயின்கள் என்றால் குறைந்தது வருடத்திற்கு மூன்று படங்களாவது நடித்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால், அவர்களிருவரைப் பொறுத்தவரையில் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க யாருமே அழைக்கவில்லை. காஜல் அகர்வால், தனுஷ் ஜோடியாக பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள், அந்தப் படம் ஆரம்பமாகுமா என்பது இதுவரை தெரியவில்லை. தமன்னாவை தமிழ் இயக்குனர்கள் சுத்தமாக மறந்தே போய்விட்டார்கள்.


ஆனால், தெலுங்கில் தமன்னா நடித்து கடந்த வாரம்தான் 'ஆகாடு' படம் வெளிவந்தது, இருந்தாலும் அந்தப் படம் தோல்வியடைந்தது. காஜல் அகவர்வால் நடித்துள்ள 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' விரைவில் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டிலாவது அவர்களை நமது இயக்குனர்கள் அழைப்பார்களா....?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in