பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் அம்மாவுமான நடிகை மற்றும் இயக்குனர் விஜய நிர்மலாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என தெலுங்கு நடிகர்கள் சங்கமான 'மா' மூலம் சிபாரிசு வைக்கப்பட்டுள்ளது. நடிகையாக தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கியவர் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார். இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார். தெலுங்குத் திரையுலகத்திலிருந்து பத்மஸ்ரீ விருதுக்கு அவரை சிபாரிசு செய்ய 'மா' முழு மனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழில் 1965ம் ஆண்டு வெளிவந்த 'எங்க வீட்டுப் பெண்' படத்தில் நடிகையாக அறிமுகமானவர் விஜய நிர்மலா. தொடர்ந்து “சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி,என் அண்ணன், ஞான ஒளி” உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் எண்ணற்ற தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளிலும் நடித்தவர்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவர் இடம் பெற்றார். ஒரு பெண் இயக்குனரான 40 படங்களுக்கும் மேல் இயக்கியது அவர் ஒருவர் மட்டுமே. தெலுங்கில் பிரபல நடிகராக இருந்த கிருஷ்ணாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின் அவர் ஐதராபாத்திலேயே தங்கிவிட்டார். அவருடைய இளைய மகனான மகேஷ் பாபு தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். மூத்த மகன் நரேஷ் குணச்சித்திர நடிகராக இருக்கிறார்.
நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், கின்னஸ் சாதனையாளர் என திரையுலகில் ஒரு சாதனைப் பெண்மணியாக திகழும் விஜய நிர்மலாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என 'மா' கருதுகிறது.