விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
கடந்த 10 ஆணடுகளுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் கொடி நாட்டிக்கொண்டிருக்கும் நடிகைகளில் கத்ரினா கைப் குறிப்பிடத்தக்கவர். 2003ல் இந்தி, ஆங்கிலத்தில் வெளியான பூம் என்ற படத்தில் அறிமுகமான இவர், கடைசியாக நடித்த தூம்-3 படம் வரை படத்துக்குப்படம் மாறுபட்ட வேடங்களில் தோன்றி ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டு வருபவர்.
அந்த வகையில், தற்போது இந்தியில் 4 படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் கத்ரினா கைப், ஹிருத்திக் ரோசனுடன் பேங் பேங் என்ற படத்திலும் நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆரம்பத்தில் ஒரு சாதாரண பெண்ணாக வரும் கத்ரினா, ஒரு கட்டத்தில் ஹிருத்திக் ரோசனுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் பெண்ணாக நடித்துள்ளாராம்.
ஜோதா அக்பர் படத்தில் ஹிருத்திக் ரோசன், ஐஸ்வர்யாராய் இருவரும் வாள் சண்டை போட்டுக்கொள்வது போன்று இந்த படத்தில் ஹிருத்திக்-கத்ரினா இருவரும் குஸ்தி போட்டுக் கொள்கிறார்களாம். ஹிருத்திக்கிற்கு இணையாக கத்ரினா கைப்பும் ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். ஆக, பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு விதமான நடிப்பை ஒரே படத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க வருகிறாராம் கத்ரினா கைப்.