துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தற்போது விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 70 கோடி என்கிறார்கள். அடுத்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். கன்னட ஹீரோ சுதீப் வில்லன். ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். நட்டு என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.
இது சரித்திர கால கதையும், நிகழ்கால கதையும் இணைந்த திரைக்கதை. அதாவது தெலுங்கில் வெளிவந்த மகதீரா பாணியிலான கதை. இதற்கான படப்பிடிப்புகள் 5 கட்டமாக நடக்க இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் கேரளாவில் தொடங்குகிறது. இரண்டாவது கட்டம் மைசூரிலும், மூன்றாவது கட்டம் தமிழ்நாட்டிலும், நான்காவது கட்டம் வடநாட்டிலும், 5வது கட்டம் வெளிநாட்டிலும் நடக்கிறது. இந்தப் படத்திற்காக விஜய் 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். கிராபிக்ஸ் பணிகளை ஹாலிவுட் நிறுவனம் கவனிக்கிறது. 9 மாதங்கள் படப்பிடிப்பு, 3 மாதம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என ஒரு வருட தயாரிப்பாக சுமார் ரூ.100 கோடியில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.