ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பம்பாய், பாபா படங்களின் மூலம் புகழ்பெற்றவர் மனீஷா கொய்ராலா. இந்தியில் பிரபலமாகி நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டட அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து கொண்டார். அந்த சிகிச்சையின் போது தனது தலைமுடியை இழந்தார்.
இந்தியா திரும்பிய அவர் ஆன்மீகத்திலும், அமைதியிலும் வாழ்க்கையை நகர்த்தினார். இப்போது 90 சதவிகிதம் கேன்சரிலிருந்து மீண்டுவிட்ட மனீஷா ஜிம்மிற்கு சென்று உடலையும் கட்டுக்கோப்பாக மாற்றி விட்டார். தனது புதிய தோற்றத்தை அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார் (அருகில் உள்ள படம்).
"நான் மறுபிறவி எடுத்திருக்கிறேன். வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ முடிவு செய்திருக்கிறேன். மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். தினமும் ஜிம்முக்கு சென்று உடம்மை பேணுகிறேன். இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.