இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கராத்தே, குங்பூ, ஜூடோ சண்டை கலையின் கலவையாக இருப்பது ஓவினாம் தற்காப்பு கலை. இந்த கலையை மையமாக வைத்து கலைவேந்தன் என்ற படம் தயாராகி வருகிறது. இந்த கலையை முறைப்படி கற்றுள்ள ஆர்.கே.பரசுராம் என்பவர் தயாரித்து இயக்குகிறார். அம்புலி 3டி படத்தில் நடித்த சனம் ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், எஸ்.கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார்.
"நான், கனடா நாட்டில் இந்த கலையை கற்றுள்ளேன். இந்த கலையை நம் நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் இந்த படத்தை இயக்கி நடிக்கிறேன். ஓவினாம் கலை மாஸ்டரான என்னை, ஷனம் ஷெட்டி காதலிக்கிறார். அந்த காதலுக்கு வில்லன்கள் மூலம் ஆபத்து வருகிறது. நாயகியும் கொல்லப்படுகிறார். கொன்ற வில்லன்ககளை ஓவினாம் கலையை பயன்படுத்தி எப்படி பழிவாங்குகிறேன் என்பது படத்தின் கதை. இதில் 100 ஓவினாம் சண்டை கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். இரண்டு கால்களும் இல்லாத பத்து வயது சிறுவன் ஓவினாம் கலைமூலம் சண்டைபோடுகிறான். இப்படி பல வித்தியாசங்களை கொண்ட படமாக இயக்கி வருகிறேன். என்கிறார் ஆர்.கே.பரசுராம்.