ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பேங் பேங் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் ஹிருத்திக் ரோஷன், ஹாலிவுட் கதைகள் எதுவும் தன்னை இதுவரை ஈர்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் பலருக்கும் ஹாலிவுட் படங்களில் நடிப்பது கனவாகவும் லட்சியமாகவும் இருந்து வரும் நிலையில் ஹிருத்திக் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஹாலிவுட் வாய்ப்புக்கள் பல எனக்கு வந்து கொண்டுள்ளன. ஆனால், அவற்றில் எந்த கதையும் என்னை கவரவில்லை. இதுவரை 5 முதல் 6 ஹாலிவுட் கதைகள் எனக்கு வந்துள்ளன என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் நடித்த ஈஸியான படங்களில் பேங் பேங் படமும் ஒன்று. எதாவது ஒரு மிகப் பெரிய சிக்கலை நீங்கள் எதிர்கொண்டு விட்டால் அதற்கு பின் எல்லாமே ஈஸியாகி விடும். சவால்களை பார்த்து பயப்படாதீர்கள். அதை நல்லவிதமாக சமாளிப்பது என்பதற்காக மட்டும் முயற்சி செய்யுங்கள் என்றும் ஹிருத்தி ரோஷன் தெரிவித்துள்ளார்.