பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகையான ஆஷா பரிகிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. 5வது ஜக்ரன் திரைப்பட விழாவின் நிறைவு நாளில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
71 வயதாகும் ஆஷா பரிக், தனது திறமையான நடிப்பின் மூலம் 1950 மற்றும் 60களில் இந்திய சினிமா துறையின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். 1959ம் ஆண்டு வெளிவந்த தில் தேகி தேகோ, 1966ல் வெளிவந்த தீஸ்ரி மன்சில், 1970ல் வெளியான கட்டி படங் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
1995ம் ஆண்டு நடிப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஆஷா, அதன் பிறகு பல டிவி சீரியல்களை தயாரித்தும் இயக்கியும் வருகிறார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பேசிய திரைப்பட விழாவின் செய்தி தொடர்பாளர், லட்ச கணக்கான இந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆஷா பரிக்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பதில் பெருமை அடைகிறோம் என தெரிவித்துள்ளார்.