சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சினிமா நடிகர்கள் இடையே சிக்ஸ் பேக் மோகம் அதிகரித்து வருகிறது. அதிலும் பாலிவுட் ஹீரோக்கள் இதை ரொம்ப தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். இதுநாள் வரை பாலிவுட் ஹீரோக்கள் 6 பேக் காட்டி வந்தநிலையில், ஷாரூக்கான் ஒருபடி மேலே போய் 8 பேக் வைத்துள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் ஹேப்பி நியூ இயர் படத்தில் அவர் 8பேக்கில் தோன்ற இருக்கிறார்.
இந்நிலையில் பாலிவுட்டின் யங் அண்ட் ஹேண்டசம் ஹீரோவான ரன்பீர் கபூரும் 6 பேக்கிற்கு தயாராகி வருகிறார். தற்போது அவர் ராய் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தப்படியாக அவர் நடிக்கும் படத்தில் தான் 6 பேக்கில் தோன்ற இருக்கிறார். இதுப்பற்றி ரன்பீர் தெரிவிக்காத நிலையில், அவரது உடற்பயிற்சியாளர் மரிகா ஜோகன்சன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இப்போது தான் எனது நண்பரை சந்தித்தேன். 6 பேக் வைப்பது தொடர்பாக இருவரும் பேசினோம். விரைவில் அவர் 6 பேக்கில் தோன்ற இருக்கிறார். அவரது அடுத்த படத்திலேயே இது நடக்கும் என்று கூறியுள்ளார்.