பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சித்தார்த் - சமந்தா இருவரும் காதலித்து வருவதாக, சில ஆண்டு களாகவே செய்திகள் புகைந்து வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே சமந்தா, தன் மூக்கை லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்ததாகவும், மீண்டும் ஒரு முறை அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும், தற்போது செய்தி பரவியுள்ளது. ஆனால், இந்த முறை சமந்தா நேரடியாக அதை மறுத்துள்ளார். 'மூக்கு நீளமாக, அசிங்கமாக இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், என் மூக்கு இயற்கையிலேயே அழகு தான். கச்சிதமாக அளவோடு அழகாக உள்ளது. பின் எதற்காக, நான் மூக்கை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். என்னிடத்தில் கத்தரிக்கும் வேலையே இல்லை. வழக்கமான வதந்தியை போல், இதுவும் ஒன்று; அவ்வளவு தான்'என, அலட்சியாக பதில் அளித்துள்ளார்.