சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ் சினிமாவில், த்ரிஷா, ஹன்சிகா, சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள், அவ்வப்போது சமூக சேவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால், ஸ்ருதி ஹாசனுக்கு, இதுவரை இதில் ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால், சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அவரை ரொம்பவே பாதித்து விட்டதாம். இதையடுத்து, பிரதமர் நிவாரண நிதிக்கு, ஸ்ருதியும் நிதி உதவி அளித்துள்ளார். 'மக்கள் மூலம் சம்பாதித்த பணத்தில், ஒரு தொகையை அவர்களுக்கே நிவாரண நிதியாக கொடுத்தது, என் மனசுக்கு திருப்தியை கொடுத்துள்ளது' என, கூறியுள்ளார், ஸ்ருதி. தொடர்ந்து, இதுபோன்ற சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் ஸ்ருதி திட்டமிட்டுள்ளார்.