பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு, மற்றும் ஆங்கில படங்களை வாங்கி அதை டப் செய்து வெளியிடுகிறவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா. இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படங்களுக்கு தமிழ் வசனங்கள், பாடல்களையும் அவரே எழுதிவிடுவார். அவர் இப்போது யாவும் காதலே என்ற ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதில் சுப்பு, சிவா, பர்தேஷ் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். சுப்பு மத்தாப்பூ என்ற படத்தில் நடித்தவர். ரஞ்சனா மிஸ்ரா, சிம்மிதாஸ், பிரான்சை சேர்ந்த கேத்ரினா ஜாக்சன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
"பெற்றவர்கள் பார்த்து நிச்சயித்தை பெண்ணை மணம் முடித்தது ஒரு காலம், தனக்குரிய ஜோடியை தேர்வு செய்து காதலித்து மணந்ததும் தமிழ் பண்பாடுதான். ஆனால் இப்போது திருமணத்துக்கு முன்பு சேர்ந்து வாழ்வதும், பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வதும், பிடிக்காவிட்டால் பிரிந்து விடுவதுமான கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. அப்படி வாழும் சில தம்பதிகளின் நிலைமை என்ன ஆகிறது என்பதை சொல்வதுதான் இந்தப் படம். சீரிழியும் சமூகத்திற்கு ஒரு பாடமாக இதனை எடுத்து வருகிறேன்" என்கிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா.