Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டிற்கு வருகிறார் அனுஷ்கா

24 செப், 2014 - 13:45 IST
எழுத்தின் அளவு:

அமன் கி ஆஷா படத்தை இயக்கிய டைரக்டர் இ நிவாஸ், தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டியை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்திற்கு ஜூவனில் என பெயரிடப்பட்டுள்ளதாம்.

இந்த படம் பற்றி இ நிவாஸ் கூறுகையில், இந்த கதையை அனுஷ்காவிற்காக தயாரித்துள்ளேன். அவருக்கு கண்டிப்பாக இந்த கதை பிடிக்கும். இந்த படத்தின் பணிகள் மிக ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இருப்பினும் அவர் தரப்பில் இருந்து எந்த முடிவும் சொல்லவில்லை. முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே அவர் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம். இப்படத்தின் கதை பற்றி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் அவரின் முடிவு பற்றிய இறுதியான அறிவிப்பு வெளியிடப்படும்.


ஜூவனில் என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏராளமான முன்னணி நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர். இது புதிய கதை. ரீமேக் கிடையாது. பெண்களை மையமாகக் கொண்ட கதையும் இல்லை. இந்த படத்தில் நிறைய கதைகள் உள்ளன. அவை அனைத்தும் க்ளைமாக்சில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in