Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஜக்கா ஜசூஸில் கோவிந்தாவிற்கு பதில் ஜாக்கி ஷெரஃப்

24 செப், 2014 - 12:58 IST
எழுத்தின் அளவு:

ஜக்கா ஜசூஸ் படத்தின் சில காட்சிகளை திரும்ப படம்பிடிக்க அப்படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக பாலிவுட்டில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தில் கோவிந்தா நடித்த காட்சிகளை நீக்கி விட்டு தான், அந்த கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெரஃப்பை வைத்து எடுக்கப் போகிறார்களாம்.

ஜக்கா ஜசூஸ் படத்தில் ரன்பீர் கபூருக்கு அப்பாவாக கோவிந்தா நடித்து வந்தாராம். அப்பா-மகனை உறவை மையப்படுத்திய இந்த கதையில் கோவிந்தாவின் தலையீடு அதிகமாக இருந்ததாம். அதனால் அவரை மாற்றி விட்டு அந்த கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெரஃப்பை நடிக்க வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனராம். இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் தற்போது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோவிந்தா 2 நாட்கள் சூட்டிங்கிற்கு வரவில்லையாம்.


படத்தில் கோவிந்தா வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாம். இந்நிலையில், கதையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என கோவிந்தா, படக்குழுவினரிடம் வற்புறுத்தி வருகிறாராம். இதனால் அதிருப்தியில் உள்ள படக்குழுவினர் படத்தில் இருந்தே அவரை நீக்க திட்டமிட்டுள்ளனராம். இதனால் அவர் நடித்த காட்சிகளை முழுவதுமாக நீக்கிவிட்டு, அந்த வேடத்தில் அவருக்கு பதிலாக ஜாக்கியை புக் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம். இதனால் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை எடுக்கப்படுவதாக இருந்த மும்பையில் நடப்பது போன்ற காட்சிகளின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.


கோவிந்தாவால் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கள் எங்கு, அப்போது நடக்க உள்ளன என்ற குழப்பம் படக்குழுவினரிடம் ஏற்பட்டுள்ளதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in