Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிங்குசாமி தயாரிப்பில் அஜித்...?

24 செப், 2014 - 10:59 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே படத் தயாரிப்பிலும், பட வினியோகத்திலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டின் வசூல் ரீதியிலான முதல் வெற்றிப் படமான 'கோலி சோடா' மற்றும் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'மஞ்சப் பை', சில வாரங்களுக்கு முன் வெளிவந்த மற்றொரு வெற்றிப் படமான 'சதுரங்க வேட்டை' ஆகிய படங்களையும் வாங்கி வெளியிட்டது. அதோடு தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'உத்தமவில்லன்', விஜய்சேதுபதி நடிக்கும் 'இடம் பொருள் ஏவல்' மற்றும் வேறு சில படங்களையும் தயாரித்து ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது.

இந்தப் படங்களையடுத்து அஜித் நடிக்கும் ஒரு புதிய படத்தையும் அவர்கள் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன் அஜித் நடித்த 'ஜி' என்ற படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். தாமதமான வெளியீட்டால் அந்தப் படம் அப்போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் முன்னணி நிறுவனமாகவும் உள்ளதால் அஜித்தை வைத்து படம் தயாரிக்க அவரை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கடுத்து அவர் நடிக்கும் படம் எது என்பது இன்னும் முடிவாகவில்லை. அஜித் தற்போது படங்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். மற்ற நடிகர்களின் அடுத்த படம் எது என்று செய்திகள் வெளிவந்தாலும் அஜித்தைப் பற்றிய தேவையற்ற செய்திகள் எப்போதுமே வெளிவராது. அதனால் அஜித்தாகவே அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும் வரையில் லிங்குசாமி தயாரிப்பில் அஜித் நடிக்கவிருப்பது செய்தியாக மட்டுமே வலம் வர வாய்ப்புள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in