இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் நாட்டில் காதல், ஆக்சன், காமெடி படங்களுக்கு பெருவாரியான ரசிகர்கள் இருந்தபோதும், திகில் படங்களை ஆதரிக்கவும் அவர்கள் தவறியதில்லை. அதனால்தான் அவ்வப்போது சில திகில் படங்களும் வசூலை வாரிக்குவித்து வருகின்றன.
அந்த வகையில், லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து, யாமிருக்க பயமேன் என்ற படமும் வெற்ற பெற்றது.அந்த வரிசையில், இப்போது சுந்தர்.சியின் அரண்மனை படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையிட்ட இடமெல்லாம் ரசிகர் கூட்டம் படையெடுப்பதால், வரும் வெள்ளிக்கிழமையில் வெளியாக இருக்கும் சில படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.
இதைப்பார்த்து, பெரிய ஹீரோக்களின் படங்களை விட இந்த மாதிரி ஆவி படங்களை நம்பி வாங்கலாம் என்ற நம்பிக்கை இப்போது விநியோகஸ்தர்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. அதன்காரணமாக, அடுத்தபடியாக கோலிவுட்டில் தயாராகிக்கொண்டிருக்கும் ஆவி படங்களை விநியோகஸ்தர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதில், லாரன்சின் முனி 3 கங்கா படத்துக்கு இப்போதே கிராக்கி ஏற்பட்டிருக்கிறதாம். இதற்கு முன்பு அவர் இயக்கி நடித்த காஞ்சனாவை விட கங்கா படம் பெரிய அளவில் கல்லா கட்டும் என்று விநியோகஸ்தர்கள் எதிர்பார்ப்பதே இதற்கு காரணமாம்.