Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் டான்ஸ் மாஸ்டருடன் பிரபுதேவா காதல்?

24 செப், 2014 - 09:05 IST
எழுத்தின் அளவு:

பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. தந்தை வழியிலேயே நடன மாஸ்டராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் சில பாடல்களில் நடனமாடி வந்த அவரை டைரக்டர் ஷங்கர் தனது காதலன் படத்தில் ஹீரோவாக்கினார். அதன்பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்தார் பிரபுதேவா. 1995ல் தனது நடன குழுவில் இருந்த ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால், வில்லு படத்தை இயக்கியபோது நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலால் மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. ஆனால் அவரையும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தவர் பின்னர் திருமணம் செய்து கொள்ளும் கடைசி நேரத்தில் பிரிந்தார்.


அதைத் தொடர்ந்து இந்தி சினிமாவிற்குள் சென்று கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வரும் பிரபுதேவா, தற்போது அஜய்தேவ்கானை வைத்து ஆக்சன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் கூட சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபுதேவா அந்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.


அப்போது அவரிடத்தில் மறுமணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டபோது, என் வாழ்க்கையில் இன்னொரு திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.


ஆனால், கடந்த சில தினங்களாக, பிரபுதேவாவுக்கும் ஒரு இந்தி பெண் டான்ஸ் மாஸ்டருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மும்பையில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால். இந்த செய்தி குறித்து பிரபுதேவா தரப்பில் இருந்து இதுவரை எந்தவித மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in