பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பத்மவிபூஷன் பெற்ற இசை கலைஞர் பண்டிட் ஜாஸ்ராஜ். இவரது மகள் துர்கா ஜாஸ்ராஜ் கடந்த வெள்ளியன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளையொட்டி, பிரபல இந்திய பாரம்பரிய இசை கலைஞர்கள் நேரில் வந்து வாழ்த்தினர். பத்மவிபூஷன் விருது பெற்ற பண்டிட் ஹரிபிரசாத் சவுராஷியா, பத்மபூஷன் விருது பெற்ற டாக்டர் என்.ராஜம், பத்மபூஷன் விருது பெற்ற விக்கு விநாயகம், பண்டிட் ராம்குமார் மிஸ்ரா, பத்மஸ்ரீ விஷ்வா மோகன், பண்டிட் ரத்தான் மோகன் சர்மா, வி.செல்வகணேஷ், அங்கிதா ஜோசி, கவுசிக் சக்கரபார்தி, டாக்டர் சங்கீதா ஷங்கர், தர்ஷன் தோசி உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
இசை கலைஞர்கள் அனைவரும் ஒன்றாக வந்து வாழ்த்தியது துர்கா ஜாஸ்ராஜ்க்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. இதுகுறித்து துர்கா ஜாஸ்ராஜ் கூறியுள்ளதாவது, எனது வாழ்நாளில், இந்தாண்டு தான் எனக்கு மிகச்சிறந்த பிறந்தநாளாக அமைந்துள்ளது. இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன். அவர்களின் அன்பும், ஆசிர்வாதமும் எனக்கு கிடைத்துள்ளது. வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்.