பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆதித்யா ராய் கபூர்-பரினிதி சோப்ரா நடித்த தவாத் இ இஷ்க் படமும், சோனம் கபூர்-ஃபவத் கான் நடித்த குப்சூரத் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை குவிக்கவில்லையாம். இந்த இரண்டு படங்களும் சமமான வரவேற்பை தான் மக்களிடம் பெற்றுள்ளனவாம்.
இவ்விருப்படங்களும் செப்டம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டன. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டின் படி, தாவத் இ இஷ்க் படத்தின் வசூல் மெதுவாக துவங்கி, தற்போது வசூலின் வேகத்தை அதிகரித்து வருகிறதாம். ரிலீசான 2 நாட்களில் இந்த படத்திற்கு ரூ.8 கோடி வசூலாகி உள்ளதாம். இருப்பினும் இந்த படம் ரிலீசாவதற்கு முன் கொடுக்கப்பட்ட பில்-டப்புக்களுடன் ஒப்பிடுகையில் இப்படத்தின் வசூல் கம்மி தானாம்.
இதே போன்று, சோனமின் குர்சூரத் படமும் பாலிவுட் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். வசூலை அள்ளிக் குவித்து புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரிலீசான 2 நாட்களில் வெறும் ரூ.6 கோடியை தான் வசூலித்துள்ளதாம்.