புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
புகழ்பெற்ற டிவி நடிகையான ஸ்மிருதி இரானி, தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இதனால் அரசு பணிகளில் அவர் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் ஓஎம்ஜி. இந்த படத்தின் இயக்குனர் இயக்குனர் மற்றொரு படமான ஆல் இஸ் வெல் படத்திலும் ஸ்மிருதி இரானி முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.
ரிஷி கபூர், அபிஷேக் பச்சன், அசின் ஆகியோர் நடிக்கும் ஆல் இஸ் வெல் படத்தில் ஸ்மிருதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புக்கள் முடிந்து விட்ட நிலையில், ஸ்மிருதி இரானி ஷூட்டிங்கிற்கு வராமல் இருப்பதால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்கப்படவில்லையாம். க்ளாமாக்சில் வரும் கார் சேசிங் காட்சியில் அபிஷேக், ரிஷி மற்றும் அசினுடன் ஸ்மிருதியும் இருக்க வேண்டுமாம். ஒருவேளை அமைச்சர் பணிகள் காரணமாக ஸ்மிருதி வராமல் போனால், படத்தை மறுபடியும் துவக்கத்தில் இருந்து எடுக்க வேண்டுமாம். அந்த அளவிற்கு ஸ்மிருதிக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
படம் முழுவதும் மட்டுமல்லாது க்ளைமாக்சிலும் ஸ்மிருதி இருப்பது அவசியம் என்பதால் அவர் இல்லாமல் தொடர்ந்து ஷூட்டிங்கை தொடர முடியாத நிலையில் ஆல் இஸ் வெல் படக்குழுவினர் தவித்து வருகிறார்களாம். உமேஷ் சுக்லா இயக்கும் ஆல் இஸ் வெல் படத்தை ஷியாம் பஜாஜ் தயாரித்துள்ளார்.