‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
'ஆடி' காரில் பயணம் செய்யும் நடிகர்கள் ஆட்டோவில் பயணம் செய்வது ஆச்சரியமான செய்திதானே. அப்படி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன். இதில் மேலும் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தன்னுடைய ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருப்பது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகரான ஹிரித்திக் தான் என்று தெரியாமலே ஆட்டோ டிரைவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றிருக்கிறார். உண்மையிலேயே ஆட்டோ டிரைவருக்கு தன்னுடைய ஆட்டோவில் பயணிப்பது ஹிரித்திக் என்று அடையாளம் தெரியவில்லையா, அல்லது அவருடைய தொழிலில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தாரா என்பதுதான் மற்றொரு ஆச்சரியம்.
இது பற்றி தன்னுடைய டுவிட்டரில் ஹிரித்திக் குறிப்பிட்டுள்ளதாவது, “என்னுடைய கார் ரிப்பேராகிவிட்டது. அதனால், இரவு நேரத்தில் ஆட்டோவில் பயணிக்கிறேன். என்னுடைய மாநகரத்தை நான் நேசிக்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆட்டோ டிரைவருக்கு இன்னும் என்னை அடையாளம் தெரியாமலிருப்பதுதான்,” என்று ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார்.
கார் ரிப்பேரானால் உடனே நண்பர்களையோ, வேறு யாரையோ அழைத்தால் கூட வந்து பிக்கப் செய்து கொண்டு போய்விடுவார்கள். ஆனாலும், ஆட்டோவில் ஹிரித்திக் பயணித்திருப்பது அவருடைய ரசிகர்களும் ஜாலியாக கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.