‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் உஸ்மான் அட் ஒன்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள். இளைஞர்கள் பற்றிய கதை. அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் ஜெயிக்க வைக்கிற ஒரு ஆசிரியரின் கதை.
இதற்காக அந்த ஆசிரியர் வாழ்க்கையில் போராடி ஜெயித்தவர்களை அழைத்து வந்து அந்த மாணவர்கள் முன் பேச வைக்கிறார். இப்படி ஒரு காட்சியில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தம், அவராகவே வந்து மாணவர்கள் முன் பேச வேண்டும் என்று இயக்குனர் அவரை அணுகினார். "நான் நானாகவே வந்தாலும், சினிமா சினிமாதான். என்னால் நடிக்க முடியாது" என்று அச்சுதானந்தம் மறுத்துவிட்டார்.
என்றாலும் இயக்குனர் உஸ்மான் அச்சுதானந்தனின் மகன் அருண்குமாரிடம் இதுவரை எடுத்த படத்தை போட்டுக்காட்டி எப்படியாவது அப்பாவை நடிக்க வையுங்கள் என்று கூறியுள்ளார். அவரும் அப்பாவிடம் படத்தை பற்றிக் கூறி நீங்கள் நடிக்க வேண்டாம். நிஜமாகவே மாணவர்களிடம் பேசுங்கள். அதனை அவர்கள் படம்பிடித்துக் கொள்வார்கள் என்று சொல்லி சம்மதிக்க வைத்து விட்டார். அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடக்கிறது.