சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் கேமராமேன் நட்டி என்கிற நடராஜன். இதில் சதுரங்க வேட்டை ஹிட் ஆனதால் இப்போது நடராஜ்க்கு கோலிவுட்டில் மார்க்கெட் எகிறி நிற்கிறது. குலசேகரனும் கூலிப்படையும், கதம் கதம் உள்பட பல படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில், கோடம்பாக்கம், ஈரம், ஆனந்தபுரத்து வீடு உள்பட பல படங்களில் நடித்த நந்தா தற்போது நடித்து வரும் கதம் கதம் படத்தில் முதலில் நந்தாதான் போலீஸ் வேடத்தில் முதன்மை நாயகனாக நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று நடராஜை இன்னொரு ஹீரோவாக இன்னொரு போலீஸ் வேடத்தில் உள்ளே இழுத்தனர்.
அதோடு, நந்தா பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் என்கிறபோதும், அவருக்கு மார்க்கெட் இல்லாததால், நடராஜின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவரை இப்போது முக்கிய ஹீரோவாக்கி விட்டார்களாம். அதைப்பார்த்து நநதாவும், தனது மார்க்கெட் நிலையை உணர்ந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் நடித்து வருகிறாராம்.