ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய்யின் கத்தி பட பிரச்சினை ஒருவழியாக தீர்ந்து விட்டதாகவே தெரிகிறது. படத்தின் ஆடியோ வெளியீடு நடப்பது வரை பெரிய அளவில் மிரட்டல் விடுத்து வந்த சில அமைப்புகள், இப்போது கத்திக்கு எதிராக அறிக்கை விடுவதையும் நிறுத்திக் கொண்டுள்ளனர். அதனால் கத்திப்படக்குழுவும், விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் காணப்படுகிறார்கள்.
மேலும், கத்தி தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்ட நிலையில், அடுத்து விஜய்யை இயக்கும் சிம்புதேவன் ஆக்சன் சொல்ல தயார் நிலையில் இருக்கிறார். விஜய் பாணியில் லவ் செண்டிமென்ட் என கதை உருவாக்கியுள்ள சிம்புதேவன் கூடுதல் காமெடியையும் மிக்ஸ் பண்ணியிருக்கிறாராம். இதனால் சமீபகாலமாக ஆக்சன் விஜய்யை படத்துக்குப்படம் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கும் என்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. மேலும், 16 வயதினிலே மயிலு ஸ்ரீதேவி ஒரு முக்கிய வேடத்திலும், நான் ஈ சுதீப் வில்லனாக நடிப்பதும் உறுதியாகி விட்டது. தற்போது கத்தி பட இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில, ஓய்வெடுத்து வரும் விஜய், நவம்பர் மாதம் 8-ந்தேதி முதல் சிம்புதேவன் இயக்கும் படத்தின் படப்பிடிபபில் கலந்து கொள்கிறாராம்.
இதற்கிடையே ராஜாராணி அட்லி இயக்கும் படத்திலும் விஜய் நடிக்கிறார். சிம்புதேவன் படத்தை முடித்து விட்டு அட்லி படத்தில் நடிக்கிறாரா? இல்லை இரண்டு படங்களிலுமே ஒரே நேரத்தில் நடிக்கிறாரா? என்பது விரைவில் தெரியவரும்.