தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படங்களில் தனது விறுவிறுப்பான நடிப்பால் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருக்கும் ரிச்சா சதா, கேங்ஸ் ஆப் வாஸ்ஸிபூர், ஃபக்ரே ஆகிய படங்களில் நடித்தவர். தற்போது இவர் நடித்துள்ள தமன்சே படமும் ரிலீசாக தயாராக உள்ளது. இந்நிலையில் இவர் வைல்ட் வைல்ட் வெஸ்ட் என்ற பிரிட்டன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
ரிச்சா நடிக்க உள்ள காமெடி கதையான இந்த படத்தை மைக்கேல் வார்டு தயாரித்து இயக்க உள்ளாராம். இந்த செய்தி உண்மை தான் என ரிச்சாவின் உதவியாளர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் விதமான ஒரு கேரக்டரில் ரிச்சா நடக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தில் ரிச்சாவுக்கு ஜோடியாக இந்திய நடிகர் ஒருவர் தான் நடிக்க உள்ளாராம்.