ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில நாட்களாக ஐ மற்றும் கத்தி படங்களின் இசைவெளியீடு தொடர்பான செய்திகள் காரணமாக சற்றே அமுங்கிப்போய் இருக்கிறது - கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் பற்றிய செய்திகள்.
தல 55 படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருக்கிறார்கள் தல 55 படக்குழுவினர்.
இதற்கிடையில் ஏற்கனவே தயாரான 3 பாடல்களையும் சத்தமில்லாமல் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஹாரிஸ் உருவாக்கியிருக்கும் 3 பாடல்களில் ஒரு பாடல் தாலாட்டுப் பாட்டாம்.
தற்போது ராஜஸ்தானில் அந்தப் பாடலின் படப்பிடிப்பில்தான் அஜித் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த தகவலை ஹாரிஸ் ஜெயராஜே ட்வீட் செய்திருக்கிறார்.
கௌதம் மேனனும் ஹாரிஸும் மீண்டும் கூட்டணி அமைந்திருப்பது திரைஇசை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.
அதைவிட, ஹாரிஸ் இசையமைப்பில் அஜித் நடிக்கும் முதல் படம் என்பதும் சேர்ந்து கொள்ள தல 55 படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உண்டாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது.
நவம்பரில் இப்படத்தின் இசைவெளியீடு நடைபெற இருக்கிறது.
டிசம்பரில் படம் ரிலீஸ்!