பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்தும் இன்னும் முதல்வரிசைக்கு வராமலே இருக்கிறார் நடிகர் விதார்த்.
கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்ற இவர், மைனா படத்துக்குப் பிறகு ஏறக்குறைய அரை டஜன் படங்களில் நடித்துள்ளார்.
அவற்றில் ஒன்று கூட விதார்த்துக்கு வெற்றியைத் தேடித்தரவில்லை.
விதார்த்தின் வீழ்ச்சிக்கு அவர் தேர்வு செய்யும் படங்களும், கதைகளுமே காரணம் என்று சொல்லப்படும் நிலையில், இன்று வெளியாகி இருக்கும் ஆள் படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார்.
அமீர் என்ற இந்திக் படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தின் நாயகனான விதார்த், அமீர் என்ற முஸ்லீம் இளைஞனாக நடித்திருக்கிறார்.
மதம் தொடர்பான இந்தப் படத்தை வெளியிட நம்ம ஊர் தணிக்கைக்குழு அனுமதி அளித்துவிட்டது.
ஆனால், ஆள் படத்தை வெளியிடக்கூடாது என்று மலேஷியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாட்டிலும் இப்படத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளிலும் ஆள் படத்துக்கு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்க வேண்டும் என்று ஆள் படத்தின் தயாரிப்பாளர் போராட்டம் நடத்தப் போகிறாராம். இதற்காக மலேஷியா சென்று போராட்டம் நடத்த இருக்கிறாராம்..
தமாஷான ஆளா இருப்பார் போலருக்கே..!