ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மும்பை நடிகையான இலியானா, தெலுங்கில் பிசியாக நடித்து வந்த போது, மும்பையிலிருந்து இடம் பெயர்ந்து, ஐதராபாத்தில் சொந்தமாக விடு வாங்கி குடியேறினார். அதையடுத்து, தமிழ், இந்தியில் நடித்த போதும், ஐதராபாத்தில் தங்கியிருந்து தான், நடித்து வந்தார். 'பர்பி' படத்திற்கு பின், இந்தியில் தொடர்ந்து நடித்துவரும் இலியானாவுக்கு, அங்குள்ள முன்னணி ஹீரோக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. அதனால், முழுநேர பாலிவுட் நடிகையாகி விட்ட இலியானா, ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டை விற்பனை செய்துவிட்டு, மும்பையிலுள்ள பாந்த்ரா பகுதியில், வீடு வாங்கி குடியேறப் போகிறாராம். அதனால், ஆந்திராவில் வீட்டை விற்பதற்கும், மும்பையில் வீடு வாங்குவதற்கும், புரோக்கர்களை தேடி வருகிறார் இலியானா.