நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
புதுமுக இயக்குனர் நிரஞ்சன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் நீதானே ராஜா. ஹீரோயினாக கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்த காயத்ரி நடிக்கிறார். மதராச பட்டினம் படத்தில் நடித்த லீமா தங்கையாக நடிக்கிறார். பாலாசிங், சம்பத்ராம், வெள்ளைதேவன், குண்டுரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். தென்காசி, குற்றாலம், பாபாநாசம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
"பாசக்கார அண்ணன் ஒருவன் தன் தங்கையை மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்து, அவளை டாக்டராக்கி தன் கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்ய வைக்க வேண்டும் என்கிற ஆசையோடு சொத்தையெல்லாம் விற்று தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்க்கிறான். அங்கு அவளுக்கு ஒரு கொடூரம் நிகழ்ந்து விடுகிறது. அதனால் பொங்கி எழும் ஹீரோ அந்த மருத்துவ கல்லூரியை என்ன செய்கிறான் என்பது தான் கதை. இன்றைக்கு மருத்துவ படிப்பு ஏழைகளுக்கு எட்டாக் கனி அதையும் மீறி உள்ளே போனால் அங்கு பல மாறுபட்ட விஷயங்கள் இருக்கிறது. வெளியில் பளபளப்பாக தோன்றும் மருத்துவ கல்லூரியின் மறுமுகத்தை துணிச்சலாக காட்டியிருக்கிறேன்" என்கிறார் இயக்குனர் நிரஞ்சன்.