Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது - சோனம் கபூர் பேட்டி!

18 செப், 2014 - 15:49 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். பாலிவுட்டின் ஸ்டைலான, திறமையான நடிகை. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார். இவருக்கு பாலிவுட்டின் டைவா என்ற பட்டமே உள்ளது. கூப்சூரத் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த சோனம் கபூர் அப்படம் பற்றி தெரிவித்திருப்பதாவது...




கூப்சூரத் குடும்ப ரசிகர்களுக்கான படம்


எங்களது கூப்சூரத் படம், 1980-ம் ஆண்டு வெளிவந்த கூப்சூரத்தை காட்டிலும் வித்தியாசமானது. கதை மட்டுமல்ல, இப்படத்தில் நடித்துள்ள எங்களது கேரக்டர்களும் வித்தியாசமாகத்தான் இருக்கும். முந்தைய கூப்சூரத் படத்தில் ரேகா மஞ்சு குப்தா ரோலில் நடித்திருந்தார், நான் இந்தப்படத்தில் டாக்டர் மிலியாக நடித்திருக்கிறேன். இரண்டு பகையான குடும்பத்தில் நடக்கும் ஒரு காதல் கதை, சொல்லப்போனால் இது ஒரு குடும்பப்படம். ரசிகர்கள் இந்தப்படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.


டாக்டராக நடிக்கிறேன்


நான் ஏற்கனவே கூறியது போல் இந்தப்படத்தில் நான் டாக்டராக நடிக்கிறேன். பாதி பெங்காலியாவும், பாதி பஞ்சாபியாகவும் நடிக்கிறேன். ஒரு அரண்மனையில் உள்ள அரசருக்கு சிகிச்சை செய்வதற்காக செல்கிறார் மிலி, ஆனால் அங்கு நிலைமையே வேறு மாதிரியாக இருக்கிறது. அங்கு ஏதோ ஒரு தீய சக்தி இருப்பது போன்ற சூழல் நிலவுகிறது, அந்த சூழலை மலி எப்படி மாற்றுகிறார் என்பதை அழகாக படமாக்கியுள்ளோம்.


ஃபவாத் ஒரு ஜென்டில்மேன்


இந்தப்படத்தில் ஃபவாத் தான் எனது கோ ஸ்டார். ஃபவாத் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நிறைய டி.வி. சீரியல்களில் நடித்துள்ளார். என்னை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த நடிகர், தன் தொழில் மீது மிகுந்த பக்தியுடையவர், மென்மையானவர், ஜென்டில்மேன். அவருடன் நடிப்பது ஈஸியாக இருந்தது. ஃபவாத் மீது பெண்கள் பைத்தியமாக இருக்கிறார்கள்.


நிஜ வாழ்க்கையில் நான் கூலான பொண்ணு


கூப்சூரத் படத்தில் டாக்டர் மிலியான நான் அந்தப்படத்தில் கூலான பொண்ணாக நடித்துள்ளேன். படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப கூலான பொண்ணு நான். நான் மட்டுமல்ல, திருமணமாகாத பெண்கள் எல்லோருமே கூலான பொண்ணுங்க தான். பொண்ணுங்க எல்லோரிடமும் நான் சொல்வது எந்தவொரு பயமும் இன்றி, வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள், அப்போது தான் உங்களது வாழ்க்கை அழகாக இருக்கும்.


டிரைலருக்கு நல்ல வரவேற்பு


எங்களது கூப்சூரத் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனது முந்தைய படமான ராஞ்சனா படத்திற்கு இதுபோன்று நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேப்போன்று படம் ரிலீஸான பிறகு ரசிகர்களிடமும், சாதாரண மக்களிடமும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.


ஹீரோக்களை பார்த்து படம் தேர்வு செய்யமாட்டேன்


எனது சினிமா கேரியரில், ஹீரோக்களை பார்த்து நான் எந்தப்படமும் தேர்வு செய்தது கிடையாது. நான் நிறைய புதுமுக நடிகர்களுடன் நடித்துள்ளேன், உதாரணமாக ரன்பீர் கபூர், ஆயுஸ்மான் கருணா போன்றவர்களை சொல்லலாம். நான் எப்போதும் கதைக்கும், எனது கேரக்டருக்கும் தான் முக்கியத்துவம் கொடுப்பேன், ஹீரோக்களுக்கோ அல்லது வேறு யாருக்காவதும் கிடையாது.


ஷூட்டிங்கை விட புரொமோஷன் கஷ்டமானது


இன்றைய சூழலில் படத்தை புரொமோட் செய்வது ரொம்ப கஷ்டமான சூழ்நிலையாக இருக்கிறது. ஷூட்டிங்கை காட்டிலும் மிகவும் கடினமாக தெரிகிறது. நிறைய செய்திதாள்கள், நிறைய செய்தி சேனல்கள், நிறைய படங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. ஷூட்டிங்கை காட்டிலும் புரொமோஷன் கஷ்டமாக இருந்தாலும், மக்களிடம் எங்களது படத்தை கொண்டு செல்ல நாங்கள் அதை கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும்.


சல்மான் உடன் நடிப்பது ஆச்சர்யம்


கூப்சூரத் படத்திற்கு பிறகு சல்மான் உடன் பிரேம் ரத்தன் தன் பயோ படத்தில் நடிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை அவருடன் நடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எனது அப்பாவின் நல்ல நண்பர் அவர். கடுமையான உழைப்பாளி மற்றும் நல்ல அறிவாளியும் கூட. ஷூட்டிங்கில் என் மீது மிகுந்த அக்கறை எடுத்து கொண்டார். அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது ஆச்சர்யமான அனுபவமாக இருந்தது.


இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in