‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடித்துள்ள புதிய இந்திப் படம் பேங் பேங். சஞ்சய் கோஷின் கதையை சித்தார்த் ராஜ் ஆனந்த இயக்கி உள்ளார். விஷால் சக்கார் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சலீம் சுலைமான் பின்னணி இசை அமைத்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. ஆக்ஷன் மற்றும் இன்னிசை சித்திரமான இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது.
இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் பாடல்களை தமிழுக்கு மாற்றி அதனையும் வெளியிடுகிறார்கள். தமிழ் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அடுத்த வாரம் பாடல் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் செய்து வருகிறது. இந்தப் படம் வருகிற அக்டோபர் 2ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.