'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் மூத்த நடிகர் நஸ்ரூதின் ஷா. 64 வயதான இவர் சுமார் 200 படங்களில் நடித்துவிட்டார். சமீபத்தில் இவர் தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார். ''அண்ட் தென் ஒன் டே'' என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த புத்தகத்தில், நஸ்ரூதின் ஷா பற்றிய முழுமையாக தகவல்கள் இல்லை. தனது வாழ்வில் நிகழ்ந்த ஏற்ற-இறக்கங்கள், தனது முதல் திருமணம், மகள் ஷீபா மற்றும் தற்போதைய மனைவி ரத்னா ஆகியோரை பற்றிய தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நஸ்ரூதின் ஷா கூறியுள்ளதாவது, இந்த புத்தகத்தை நான் ஆர்வமில்லாமல் தான் எழுதினேன். மீதமுள்ளதை எனது அடுத்த புத்தகத்தில் எழுதுவேன், ஆனால் நான் இதை முழுமையாக எழுதுவேனா என்பது தெரியாது. தற்போது சிறிதுகாலம் எழுதுவதற்கு ஓய்வு கொடுத்துள்ளேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்த அனுபவங்களையும் சேர்த்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.