இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
கணவரை விட்டு பிரிந்து வந்த காவ்யா மாதவன், இப்போது முழு வீச்சில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மலையாளத்தில் ஏற்கனவே தனக்கென இருந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள காவ்யா, தற்போது கமர்சியல் கதாபாத்திரங்களாக இல்லாமல், சமுதாயத்துக்கு மெசேஜ் சொல்லும் கேரக்டர்களாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது லாஸ்ட் பெல் என்றொரு மலையாள படத்தில் அவர் அரசு பள்ளியில் வேலை செய்யும் டீச்சராக நடிக்கிறார். நிறைய மாணவ-மாணவிகள் படித்த அந்த பள்ளியில் ஒரு கட்டத்தில் அனைவருமே படிப்பதை நிறுத்தி விடுவார்களாம். ஒரேயொரு மாணவன் மட்டும்தான் தினமும் பள்ளிக்கு வந்து படிப்பானாம். அந்த ஒரு மாணவனுக்காக தினமும் பாடம் நடத்துவாராம் காவ்யா மாதவன்.
இதேபோல், பல ஊர்களில் மாணவர்கள் பள்ளிக்கு வராததை காரணம் காட்டி அரசாங்கமே பள்ளிகளை இழுத்து மூடி வரும் அவல நிலையும் நடந்து கொண்டிருப்பதால், அதை பொதுமக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த படம் உருவாகிறதாம். அதனால், பெரிய அளவில் தனக்கு சம்பளம் கிடைக்காது என்பது தெரிந்தும், ஒரு சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த படத்தில் நடித்து வருகிறாராம் காவ்யாமாதவன்.