'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக், போமன் இரானி, சோனு சூட், தீபிகா படுகோனே ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப் 15ம் தேதி நடந்தது. விழாவில் ஷாரூக், அபிஷேக், தீபிகா, சோனு சூட், இசையமைப்பாளர்கள் விஷால்-சேகர், பாடலாசிரியர் இர்ஷாத் கமில், பாடகிகள் நீட்டி மோகன், கனிகா கபூர், சுக்விந்தர் சிங், இயக்குநர் பாரா கான் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், நீட்டி மோகன், கனிகா கபூர், உள்ளிட்ட பலர் ஹேப்பி நியூ இயர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாடினர். தொடர்ந்து ஷாரூக் உள்ளிட்ட படத்தில் நடித்வர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது
நிகழ்ச்சியில் பேசிய பாராகான், ஒவ்வொரு படத்திற்கு பாடல்கள் முக்கியாமானது, எனது எண்ண ஓட்டங்களில் பாடல் மற்றும் நடனம் தொடர்பான சிந்தனைகளை அதிகமாக ஓடிக்கொண்டிருக்கும். ஒரு படத்தின் கதையை முன்னோக்கி இழுத்து செல்வது பாடல்கள் தான். ஹேப்பி நியூ இயர் படத்தின் பாடல்களும் அப்படித்தான். இர்ஷாத், விஷால்-சேகர் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக ஷாரூக்கானுக்கு என் நன்றிகள், அவரது படங்களில் எல்லாம் பாடல்கள் சூப்பராக இருக்கும். அதனால் இந்தப்படத்திற்காகவும், பாடல் காட்சிகளில் அதிகம் ஈடுபாடு காட்டினேன் என்றார்.
தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் ஹேப்பி நியூ இயர் படத்தை ரெட் சல்லி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தி மட்டுமல்லாது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஹேப்பி நியூ இயர் படம் ரிலீஸாக இருக்கிறது.
ஹேப்பி நியூ இயர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்...
1. இந்தியா வாலி... பாடியவர்கள் - நீட்டி மோகன், விஷால் தத்லானி மற்றும் ஷங்கர் மகாதேவன்.
2. மன்வா லகே... பாடியவர்கள் - ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜீத் சிங்
03. சதக்கலி... பாடியவர்கள் - சுக்வீந்தர் சிங்
04. லவ்லி.... பாடியவர்கள் - கனிகா கபூர், விஷால் தத்லானி,
05. வேர்ல்டு டான்ஸ்... பாடியவர்கள் - நீட்டி மோகன், விஷால் தத்லானி
06. நான்சென்ஸ் கீ நைட்... பாடியவர்கள் - மிகா சிங்
07. டான்ஸ் லைக் எ சாமியா... பாடியவர்கள் - சுனிதீ சவான், விஷால் தத்லானி
08. ஷராபி... பாடியவர்கள் - மஞ்ச் மிஸிக், நிந்தி கவுர், விஷால் தத்லானி
09. இந்தியா வாலே... பாடியவர்கள் - நீட்டி மோகன், விஷால் தத்லானி
10. தீ ஹீஸ்ட்...
11. காம்லீ... பாடியவர்கள் - கனிகா கபூர், ரவீந்திர உபேதே.