கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
கடந்த சில மாதங்களுக்கு முன் சல்மான் கான் மற்றும் கரீனா கபூர் இருவரும் கபீர் கானின், பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன்பின் அந்தபடம் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இந்நிலையில் இப்படம் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதில், படத்தின் டைட்டில் ரோலிலேயே சல்மான் கான் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்திலேயே சல்மான் கான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி படத்தை ரிலீஸ் செய்ய சல்மான் கான் திட்டமிட்டு இருக்கிறார். சமுதாயத்தின் இன்றைய நிலையை அப்படியே வெட்ட வெளிச்சமாக போட்டு காட்ட இருக்கிறது பஜ்ரங்கி பாய்ஜான் படம்!