'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஷாத் அலி இயக்கி வரும் புதிய படம் கில் தில். இப்படத்தில் ரன்வீர் சிங், ப்ரணீதி சோப்ரா, அலி ஜாபர் ஆகியோருடன் மாஜி ஹீரோ கோவிந்தாவும் நடிக்க இருக்கிறார். ஆக்ஷ்ன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் கில் தில் படத்தின் கோவிந்தா மற்றும் அலி ஜாபரின் போஸ்டரிலும் நாங்களும் கொல்லப்போகிறோம் என்று கூறிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. கோவிந்தாவின் போஸ்டரில் பணத்திற்காக கொல்ல போகிறேன் என்றும், அலி ஜாபரின் போஸ்டரில் நண்பனுக்காக கொல்ல போகிறேன் என்றும் கூறப்பட்டுள்ளது.
படத்தின் போஸ்டர்களை வைத்து பார்க்கும்போது ரன்வீர் சிங் காதல் நாயகனாகவும், அவரது காதலியாக ப்ரணீதியும், ரன்வீரின் நண்பராக அலி ஜாபரும் நடிப்பார்கள் போல தெரிகிறது. அதேசமயம் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் கோவிந்தாவை பார்க்கும் போது, அவர் தான் இப்படத்தின் வில்லனாக நடிப்பார் போல தெரிகிறது. மேலும் படத்தில் ரன்வீர் மற்றும் கோவிந்தா நேருக்கு நேர் ஆடும் ஒரு அற்புதமான பாடல் காட்சியும் உள்ளதாம்.