மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அமீர்கான் நடித்து வரும் பிகே படத்தின் அடுத்தடுத்து வரும் போஸ்டர்களால் ரசிகர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ரயில் தண்டவாளத்தின் நடுவில் நிர்வாணமாக நின்று கொண்டு ஒரு டேப் ரிக்கார்டரால் முக்கிய பகுதியை மறைத்து வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை கிளப்பியதோடு கோர்ட் வரைக்கும் போனது.
இதை கண்டு கொள்ளாத அமீர்கான் "கோர்ட்டுக்கு போன இரண்டு பேரைத் தவிர மற்றவர்களுக்கு அது பிடித்திருக்கிறது" என்றார். இப்போது தலையை தவிர வேறு பாகம் எதுவும் தெரியாத போலீஸ் உடை அணிந்து அடுத்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். அதோடு படத்தில் நடிக்கும் சஞ்சய்தத்திற்கு பிரன்ஞ் ஹார்ன் டிரஸ் போட்டு அந்தப் படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
இப்படி மாறி மாறி வரும் போஸ்டர்களால் இது எந்த மாதிரியான படம் என்று ரசிகர்கள் குழம்பிபோயிருக்கிறார்கள்.