‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தாவீத் இ இஷாக் படத்தை புரோமோட் செய்வதற்காக அப்படத்தில் நடித்த ஆதித்யா ராயும், பரினிதி சோப்ராவும் உணவு யாத்திரை நடத்தி வருகின்றனர். ஆக்ராவின் புகழ்பெற்ற பன்சி பேதா பகுதிக்கு வந்த இந்த உணவு யாத்திரை, டில்லிக்கு செல்லும் வழியில் உள்ள ரஜ்மா-சாவல் என்ற எளிய விடுதியில் மதிய உணவை சாப்பிட்டனர். பின்னர் பயணத்தை தொடர்ந்து இந்த ஜோடி டில்லிக்குள் நுழைந்தது.
டில்லியில் தாவீத் இ இஷாக் படக்குழுவினரை ஆவலுடன் வரவேற்றனர். அதிலும் பெண் ரசிகைகள் ஆதித்யாவை சுற்றிக் கொண்டனர். ஆதித்யாவுடனும், பரினியுடனும் ஆர்வமுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். பின்னர் தெற்கு டில்லிக்கு சென்ற படக்குழுவினர், டில்லியின் ஒவ்வொரு உணவு பிரியர்களும் முகாமிடும் ரஜிந்தர் தா தபா பகுதியில் அசைவ உணவுகளை திரும்ப திரும்ப கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர்.
நாள் முழுவதும் டில்லிக்குள் சுற்றித் திரிந்த படக்குழுவினர் ஐஸ்க்ரீமும், இரவு உணவையும் சாப்பிட்டனர். அவர்கள் இரவு உணவை ரசித்தது வேறு எங்கும் இல்லை...நம் இந்தியா கேட்டில் தான்.