துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
''மே ஹூன் ரஜினிகாந்த்'' என்ற இந்தி படத்திற்கு தமது அனுமதியின்றி தனது பெயரை பயன்படுத்தியுள்ளதாக கூறி அப்படத்தை தடை விதிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்சினிமாவின் நம்பர்-1 நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தியில் பைசல் சைப் இயக்கத்தில், ''மே ஹூன் ரஜினிகாந்த்'' என்ற பெயரில் இந்திப்படம் ஒன்று தயாராகி வருகிறது. ஜே.ஜே, பில்லா, சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஆதித்யா மேனன், இப்படத்தின் மூலம் இந்தியில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக கவிதா ரதேஷியம் நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் "மே ஹூன் ரஜினிகாந்த்" என்ற இந்தி படத்தில், தமது அனுமதியின்றி, தனது பெயரை பயன்படுத்தியுள்ளதாகவும், படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், படத்தை வரும் 25ம் தேதி வரை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.