கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வரும் அமீர்கான் நடத்து வரும் பிகே படத்திற்கு புதிய எதிர்ப்பு ஒன்று கிளம்பி உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் நாசிக்கில் உள்ள கலா ராம் கோயிலிலும், அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஷூட்டிங் எடுப்பதற்கு படக்குழுவினர் போதிய அனுமதி வாங்கவில்லை என கோயில் டிரஸ்டிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் தயாரிப்பாளர் செய்வதறியாமல் திணறினார். இருப்பினும் இந்த பிரச்னை உடனடியாக தீர்க்கப்பட்டது.
கோயிலிலும், கோயிலை சுற்றி உள்ள பகுதிகளிலும் படம் எடுப்பதற்கு செப்டம்பர் 2ம் தேதியை கோயில் நிர்வாகத்தினரிடம் படக்குழுவினர் அனுமதி பெற்று விட்டார்களாம். அதற்காக ரூ.25,000 நன்கொடையும் கோயிலுக்கு கொடுக்கப்பட்டு, ரசீதும் பெற்றுள்ளனர். இது தெரியாமல் கோயில் டிரஸ்டிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். விபரம் அறிந்த மற்ற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகளுடம் விபரத்தை கூறி புரிய வைத்ததை அடுத்து அவர்கள் சமாதானம் ஆகி உள்ளனராம். இந்த பிரச்னை நடந்த போது படத்தின் ஹீரோ அமீர்கானும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.