ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரேகா நடிப்பில் வெளிவர இருக்கும் சூப்பர் நானி படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட உள்ளது. இதே நாளில் சோனம் கபூர் நடித்த கூப்சூரத் படமும் வெளியாக உள்ளது. இப்படம் ரேகா நடித்த குப்சூரத் படத்தின் ரீமேக்காகும்.
ரேகா முன்பு நடித்த குப்சூரத் படம், தற்போது தான் நடித்துள்ள சூப்பர் நானி படத்தின் ட்ரைலரும் ஒரே நாளில் ரிலீசாவது ரேகாவிற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் நானி படம், இந்திரா குமாரும் அசோக் தகேரியாவும் இணைந்து தயாரித்து, இந்திரா குமார் இயக்கி உள்ள படம்.
இருப்பினும் ரேகாவின் ரசிகர்களை கூடுதல் சுவாரஸ்யம் தரும் வகையில் சோனம் கபூரின் குப்சூரத் படத்துடன் இணைத்து ரோகாவின் சூப்பர் நானி படத்தின் ட்ரைலரையும் செப்டம்பர் 19ம் தேதி தியேட்டரிலேயே வெளியிட உள்ளார்களாம்.
ரேகா நடித்து 1980ல் வெளியான குப்சூரத் படம் மெகா ஹிட்டானது. அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள படத்துடன் தற்போது அவர் நடித்துள்ள படத்தின் ட்ரைலர் வெளியிடபட உள்ளதால் இந்த படமும் ஹிட்டாகும் என நம்பப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரேகா நடித்துள்ள சூப்பர் நானி படத்தில் ஷர்மன் ஜோஷி, ஸ்வேதா குமார், அனுபம் கர், ரந்தீர் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாளியை முன்னிட்டு அக்டோபர் 24ம் தேதி வெளியிடப்பட உள்ளது.