Advertisement

சிறப்புச்செய்திகள்

ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சன்னி லியோனுடன் ஜோடி சேரும் த்ரிஷாவின் நண்பர்...!

17 செப், 2014 - 10:48 IST
எழுத்தின் அளவு:

ஜெய், சுவாதி நடிக்க சரியாக சமைக்கப்படாத 'வட கறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன் நடிக்கும் 'ஒன் நைட் ஸ்டான்ட்' என்ற ஹிந்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான ராணா டகுபதி ஒப்பந்தமாகியுள்ளாராம். தெலுங்கில் முன்னணி இடத்தைப் பிடிக்கப் போராடி வரும் ராணா டகுபதி ஹிந்தி, மற்றும் தமிழ்ப் படங்களிலும் ஏற்கெனவே நடித்தவர்தான். 'ஆரம்பம்' படத்தில் அஜித்தின் நண்பராக நடித்தவர்தான் இந்த ராணா.


இதற்கு முன் 'தம் மாரோ தம், டிபார்ட்மென்ட், ஹே ஜவானி ஹை தீவானி”, ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நீரஜ் பான்டே இயக்கத்தில் அக்ஷய் குமார், டாப்ஸீ நடிக்கும் 'பேபி' என்ற ஹிந்திப் படத்தில் ராணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படம் வெளியாகலாம். ஹிந்தியில் அடுத்து அவர் நடிக்க உள்ள படம்தான் 'ஒன் நைட் ஸ்டான்ட்'. இயக்குனர் ஆண்டனி டிசௌசாவின் மனைவியான ஜாஸ்மின் டிசௌசா இப்படத்தை இயக்க உள்ளார். பல விளம்பரப் படங்களை எடுத்துள்ள இவர், கணவரின் படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர். இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.


சன்னி லியோன் இந்தப் படத்தில் ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறாராம். ராணாவுடனான ஒரு சந்திப்பு அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றி விடுகிறது என்பதுதான் படத்தின் கதையாம். தென் ஆப்பிரிக்காவில் விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர், அடுத்த ஆண்டு படம் வெளியாக உள்ளது.


படத்தோட டைட்டிலைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட வேண்டாம், இது ஒரு உணர்வு பூர்மான குடும்பக் கதையாம்...!!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in