600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை கங்கனா ரணாவத்திற்கு இப்போது படம் இயக்கும் ஆசை மேலோங்கி உள்ளது. முதற்கட்டமாக குறும்படங்கள் மூலம் அதை நிறைவேற்ற துவங்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய குறும்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அவர் பெரிய படம் இயக்கும் முடிவில் இருக்கிறார். சினிமாவில் எந்த மாதிரி படங்களை இயக்க உங்களுக்கு ஆசை, குறிப்பாக கமர்ஷியல் ரீதியான படங்களை இயக்குவீர்களா என்று கங்கனாவிடம் கேட்டால், உடன், நான் முழுக்க முழுக்க பொதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களை எடுக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார். நிறையபேர் கங்கனா, நல்ல துடிப்பான படங்களை இயக்க தான் ஆசைப்படுகிறார் என்று எண்ணியிருந்த நிலையில், தன் மனதில் பொழுதுபோக்கான படங்களை இயக்கவே ஆசை என்று கூறியுள்ளார்.