ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் தற்போது, 'உத்தமவில்லன்' படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட்புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்தப்படியாக அவர், மலையாளம், த்ரிஷ்யம் ரீ-மேக்கான, ''பாபநாசம்'' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் திடீரென, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு நியூரோ பிரச்னை என்றும் தகவல்கள் வெளியானது. இதுப்பற்றி அவரின் குடும்ப டாக்டரான ஜே.ஆர்.,சுப்ரமணியம் கூறுகையில், கமலுக்கு நியூரோ பிரச்னை எதுவும் கிடையாது. இது வழக்கமான உடல்பரிசோதனை தான். அவர் நலமாக இருக்கிறார். மருத்துவமனைக்கு அவர் நடந்தே தான் வந்தார் என்றார்.