‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட் நடிகை வித்யா பாலனை போன்று லட்சுமி மேனனும் தற்போது தான் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களுக்கும் பாரம்பரிய உடைகளிலேயே வலம் வருகிறார்.
வித்யா பாலன் எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் டிசைனர் சேலைகளை மட்டுமே உடுத்தும் வலம் கொண்டவர். இவரை பின்பற்றி, சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட லட்சுமி மேனன், அவரைப் போன்ற தோற்றத்தில் புடவையில், பாரம்பரிய நகைகளை அணிந்து கலந்து கொண்டுள்ளார்.
இந்த விழாவில் தமன்னா, அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரேயா சரண், நெசினா, நிவின் பவுலி உள்ளிட்ட ஏராளமான தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் லட்சுமி மேனன் தானாம்.