தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிகே படத்திற்காக நடிகர் அமீர்கான் நிர்வாணமாக, டேப் ரிக்கார்டரை மட்டும் வைத்து மறைத்தபடி தண்டவாளத்தில் நிற்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இது பல்வேறு எதிர்ப்புக்களையும், சர்ச்சைகளையும் சந்தித்தது. பிகே படத்தின் சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது அதனையும் மிஞ்சும் வகையில் ஓகே படத்தின் போஸ்டர் உள்ளது.
ஓகே படத்தை புரோமோட் செய்வதற்காக, ஒரு பெண் நிர்வாணமாக கேமிராவை மட்டும் வைத்து மறைத்தபடி நிற்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்திருப்பது பூணம் ராய் தான். எம்.எம்.எஸ். காந்த், ஃபிரி என்ட்ரி, அன்கூர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கன்டிஷா தான் இந்த ஓகே படத்தையும் இயக்கி உள்ளார்.
ஓகே படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள பூணம் ராய் நிர்வாண போஸ் கொடுத்திருக்கும் ஃபர்ஸ் லுக் போஸ்டர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு விலைமாதுவின் வாழ்க்கை பற்றி கூறுவது தான் ஓகே படத்தின் கதையாம்.
அமீர்கானின் நிர்வாண போஸ்டர் பிகே படம் வெளியாவதற்கே தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கிளப்பி விட்டுள்ள நிலையில், ஓகே படத்தின் போஸ்டர் சட்ட பிரச்னைகளை மட்டுமல்லாது சமூக பிரச்னைகளையும் சந்திக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இது தவிர என்னென்ன பிரச்னைகள் ஓகே படத்திற்கு கிளம்ப போகிறது, அது என்ன கதிக்கு ஆளாக போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.