ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தங்களது கடந்தகால பகையை மறந்து சல்மான் கானும், ஷாரூக்கானும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். ஒருவரையொருவர் சிபாரிசு செய்து வருகின்றனர். இந்நிலையில் சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ்-8 நிகழ்ச்சியின் பிரஸ்மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அதில் பேசிய சல்மான் கானிடம், ஷாரூக்கானின் ஹேப்பி நியூ இயர் படத்தை புரொமோட் செய்வீர்களா என்று கேட்டபோது, நிச்சயமாக செய்வோம், அவர்கள் படத்தை புரோமோட் செய்ய எங்களை அணுகினால் நாங்களும் செய்வோம் என்றார். இதன்மூலம் ஷாரூக், சல்மானின் நட்பு மேலும் உறுதியாகி கொண்டு இருப்பது தெரிகிறது.