'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ஷாசா அகா கான்- ஜெய் பனுசாலி நடிக்கும் புதிய படம் தேசி கட்டி. இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் இடும்பெற்றுள்ள பஸ் தும் ஹோ என்ற மொலோடியான காதல் பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாடலில் ஷாசா-ஜெய் பனுசாலி இடையே கெமிஸ்ட்சி மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாகவும், அது இந்த பாடலில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருப்பதாகவும், அனைவரின் மனதில் இருக்கும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் அமைந்திருப்பதாகவும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இது குறித்து ஷாசா கூறுகையில், இந்த பாடல் படமாக்கப்பட்டது ஒரு மிக அற்புதமான அனுபவம். அதிலும் ஆனந்த் குமார் சாருடன் பணியாற்றியது அற்புதமான விஷயம். அந்த பாடலை விரும்பி எங்களின் கெமிஸ்ட்ரி பற்றி பாராட்டிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
உள்ளத்தை அள்ளும் பாடல் வரிகளும், ஷாசா-ஜெய் நனுசாலி இடையேயான கெமிஸ்ட்ரியும் இணைந்து பஸ் தும் ஹோ பாடலுக்கு பெருத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்த பாடலின் இந்த ஆண்டின் மிகச் சிறந்த ரோமான்டிக் பாடலாக பெயர் எடுக்கும் என்றே கூறலாம்.
படத்தின் இயக்குனர் ஆனந்த்குமார் கூறுகையில், ஷாசாவும் ஜெய் பனுசாலியும் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இளம் நடிகையான ஷாசாவிற்கு ஜெய் பனுசாலியுடன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப் போயுள்ளது. இந்த பாடல் முழுக்க முழுக்க வெட்கம், காதல், காதலர்களிடையேயான ரோமான்சை மையப்படுத்தியதாகும். அந்த இந்த ஜோடி சிறப்பாக செய்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.