பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள குபுசூரத் படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே தன் அப்பா அனில் கபூருடன் நடிக்கும் ஒரு அருமையான வாய்ப்பினை சோனம் கபூர் இழந்துள்ளார், இதனால் அந்த வாய்ப்பு இப்போது ஹன்சிகாவுக்கு சென்று இருக்கிறது
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார், இதற்கு அடுத்தப்படியாக தான் நடிக்கும் புதிய படத்தில் தனக்கு ஜோடியாக இந்தி சோனம் கபூரை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் பேசியுள்ளார். சோனம் கபூருக்கு கதையும் பிடித்து போய்விட்டது, ஆனால் சம்பள விஷயத்தில் சோனம் ஒத்து வராததால் நடிக்க மறுத்துவிட்டார். சோனம் இந்தபடத்திற்கு சுமார் ரூ.4.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார், அவ்வளவு பெரிய தொகை கொடுக்க உதயநிதி தயாராக இல்லை, இதனால் தான் ஏற்கனவே ஹீரோவாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவை ஓ.கே. செய்துவிட்டார்.
சரி இதற்கும், சோனம் கபூர், தன் அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்ததற்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா.? அங்கு தான் ஒரு டுவிட்ஸ்ட்டே இருக்கிறது, உதயநிதி நடிக்கும் படத்தில், ஹன்சிகாவின் அப்பாவாக அனில் கபூர் தான் நடிக்கிறார். ஒருவேளை சோனம் கபூர் ஓ.கே. சொல்லியிருந்தால் தான், தன் அப்பாவுடன் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த ஆசை நிறைவேறியிருக்கும். இதனால் சோனம், தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம்.