ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தெலுங்கில் தற்போது மல்டி ஸ்டார் படங்கள் நிறையவே வர ஆரம்பித்து விட்டன. அதிலும் சீனியர் ஹீரோ ஒருவரும் ஜுனியர் ஹீரோ மற்றொருவரும் என்ற பாணியில் சில படங்கள் வந்து வெற்றி பெற்றன. தற்போதும் சில படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓரளவிற்கு ஆரோக்கியமான மல்டிஸ்டார் படங்கள் தெலுங்கில் தயாராகி வருவது அந்தத் திரையுலகைப் பொறுத்தவரை ஆரோக்கியமான ஒரு விஷயமாகவே திரையுலகினர் பார்க்கிறார்கள். தமிழைப் பொறுத்தவரையில் அது எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும் விஷயமாக இருக்கிறது. இன்றைய இளம் ஹீரோக்கள் பலரும் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் இணைந்து நடித்து வருகிறார்கள். அந்த விதத்தில் விஷாலும், ஆர்யாவும் ஏற்கெனவே 'அவன் இவன்' படத்தில் இணைந்து நடித்தது போல் விரைவில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.
தமிழில் சமீபத்திய தனது தோல்விப் படங்களால் தடுமாறிக் கொண்டிருக்கும் கார்த்தி விரைவில் நாகார்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஒரு நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் அந்த கதாபாத்திரத்தில் ஜுனியர் என்டிஆர் தான் நடிக்க இருந்தாராம். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் அந்தப் படத்திலிருந்து விலகி விட கார்த்தியை அணுகியிருக்கிறார்கள். கார்த்தி நடித்த சில படங்கள் தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளதால் அவரைப் பற்றிய பரிச்சயம் தெலுங்கு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.